கனிமொழியின் வெற்றியை எதிர்த்து வழக்கு?? – அடுத்த டார்கெட் ஆகிராறா கனிமொழி?

Last Modified புதன், 4 செப்டம்பர் 2019 (17:51 IST)
மக்களவை தேர்தலில் திமுக எம்.பி கனிமொழி வெற்றிப் பெற்றதில் விதி மீறல்கள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

இந்நிலையில் கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், முழுமையாக நிரப்பப்படாத படிவத்தை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது சட்ட விரோதம் எனவும் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பான சரியான விவரஙகளோடு 2 வார காலத்திற்குள் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸின் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கர்நாடகாவிலும் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவையெல்லாம் ஆளும் பாஜக கட்சியின் அராஜக செயல் என ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாஜக மாநில தலைவரான தமிழிசை தற்போது தெலுங்கானா கவர்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கனிமொழியின் தேர்தல் வெற்றி கேள்விக்கு உள்ளாகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சந்தேகத்தோடு பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :