மிகப்பெரிய ஆளுமையை விமர்சிப்பதா? ரஜினிக்காக பொங்கும் எச்.ராஜா!
நடிகர் ரஜினி மிகப்பெரிய ஆளுமை; அவரை குறித்த விமர்சனங்கள் நாகரிகமற்றது என பாஜக முக்கிய தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் பாஜக மேலிடம் உள்ளது.
இந்த பதவிக்கு எஸ்வி சேகர், இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், கேடி ராகவன் உள்பட சுமார் 8 பேர் பட்டியலில் இருப்பதாகவும் இவர்களில் ஒருவர் பாஜக தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பாஜகவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவிற்கு சம்பந்தமே இல்லாத ரஜினியை பாஜக தமிழகத் தலைவராக நியமனம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பாஜகவின் ஒரு சில நடவடிக்கைகளை ரஜினி ஆதரிப்பதால் அவர் மீது பல விமர்சங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், பாஜக முக்கிய தலைவர் எச்.ராஜா, ரஜினிகாந்த் அரசியல் குறித்த தனது நிலைபாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. அவர் ஒரு மிகப்பெரிய ஆளுமை. அவர் குறித்த விமர்சனங்கள் நாகரிகமற்றது என தெரிவித்துள்ளார்.