Daily Horoscope
✕

இன்றோ அல்லது நாளையோ ராஜேந்திர பாலாஜி கைது?

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 27 டிசம்பர் 2021 (16:34 IST)
ரூ. 3 கோடி மோசடி செய்த ராஜேந்திர பாலாஜியை நெருங்கிவிட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

 
ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதை அடுத்து அவர் திடீரென தலைமறைவானார் என்பதும், அவரை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
 
கடந்த 17 ஆம் தேதி முதல் ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 11 நாட்களாக தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது 6 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியை நெருங்கிவிட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கூறப்பட்டுள்ளதாவது, சாதாரண பட்டன் கைப்பேசியை ராஜேந்திர பாலாஜி பயன்படுத்தி வருகிறார். எனவே அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. 
 
தற்போது அவர் பதுங்கியுள்ள இடத்தை நெருங்கியுள்ளோம். இன்றோ அல்லது நாளையோ அவர் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....

இந்த முட்டாள்களுக்கு இது தெரியாதா?.. திமுகவை திட்டிய ஆதவ் அர்ஜுனா!...

நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..

யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்குறீங்க!.. எனக்கு இல்லையா?!.. டிரம்ப் கோபம்!...

வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments