பஸ் வசதி இல்லை என புகார் அளித்த பெண்: அமைச்சரின் அதிரடி ரியாக்சன்
தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க வரும் அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களிடம் பொதுமக்கள் என்ன குறை கூறினாலும் அந்த குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் தீவிரமாகி வருகிறது
இந்த நிலையில் நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களிடம் பெண் ஒருவர் தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி இல்லை என புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து உடனடியாக போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு தொலைபேசியில் அழைத்து புகார் அளித்த பெண்மணியையே பேச வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு வெகு விரைவில் பேருந்து வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது