புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஜூலை 2023 (07:38 IST)

சென்னையில் விடிய விடிய மழை.. குளிர்ச்சியான தட்பவெபத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Rain
சென்னையில் உள்ள பல பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெப்பம் மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னையில் நேற்று மாலை திடீரென பல பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், பகுதிகளில் பரவலான மழை பெய்தது. 
 
அதேபோல் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, ராயப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை மாறியது என்பதும் நீண்ட இடைவேளைக்கு பின்னர் கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்கள் விடுபட்டு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்னும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva