வெள்ளி, 10 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (07:27 IST)

ஹரிஷ் கல்யாண் படத்துக்காக சென்னை வந்த தோனி…!

ஹரிஷ் கல்யாண் படத்துக்காக சென்னை வந்த தோனி…!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் முதல் படமாக தமிழ்ப் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார். இந்த படத்துக்கு லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் இசை மற்றும் ஆடியோ வெளியீடு இன்று மாலை சென்னையில் நடக்க உள்ள நிலையில் அந்த நிகழ்ச்சிக்காக தோனியும், அவர் மனைவி சாக்‌ஷி தோனியும் சென்னை வந்துள்ளனர்.

கலகலப்பான காதல் படமாக உருவாகியுள்ள எல்ஜிஎம் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் படத்தின் அறிமுக டீசர் சமீபத்தில் ரிலீஸானது.