புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஜூலை 2023 (15:00 IST)

தோனியின் முதல் படம்; நாளை இசை வெளியீடு! – குடும்பத்தோடு சென்னை வரும் தோனி!

LGM
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் படமான Lets Get Married படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது.



இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பிரபலமாக இருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தோனிக்கு தமிழ்நாட்டில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தமிழில் படங்கள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கிய தோனி Dhoni entertainment என்ற நிறுவனத்தையும் தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக Lets get married என்ற படம் தயாராகியுள்ளது.

இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இயக்குனர் ரமேஷ் தமிழ்மணியே இசையும் அமைத்துள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் நாளை ஜூலை 10ம் தேதி சென்னையில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியும் கலந்து கொள்கின்றனர்.

Edit by Prasanth.K