திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 8 ஜூலை 2023 (18:47 IST)

செல்லப்பிராணிகளுடன் தனது பிறந்தநாள் கொண்டாடிய தோனி! வீடியோ வைரல்

dhoni
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன் வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய  ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர், ஒருநாள், டி20, சாம்பியன் கோப்பை ஆகிய முத்தரப்பு கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த கேப்டன் ஆவார்.

சில ஆண்டுகளுக்கு முன் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறித்தார்.

தற்போது, ஐபிஎல் –போட்டிகளில் சென்னை அணிக்கு கேப்டனாக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

சமீபத்தில்  நடைபெற்ற ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் இறுதிப் போட்டியில்  ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  வென்று   5வது முறையாக  சேம்பியன் கோப்பை வென்றது.

இந்த நிலையில்,  நேற்று தோனியின் 42 வது பிறந்த  நாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறினர்.

இதையடுத்து, இன்று சமூக வலைதளத்தில் தோனி, தன் பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும்  நன்றி தெரிவித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார், மேலும்,   நேற்று  தன் வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய   ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இது  வைரலாகி வருகிறது.

நேற்று, தோனியின் 42 வது பிறந்தநாளை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் ரசிகர்கள் 52 அடியில் தோனிக்கு கட் அவுட் வைத்தது குறிப்பிடத்தக்கது.