வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூலை 2023 (13:48 IST)

தமிழகத்தில் ஜூலை 15ம் தேதி வரை கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதேபோல் தமிழகத்தில் கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. 
 
மேலும் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 15ஆம் தேதி வரை காண மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது. 
 
மேலும் ஜூலை 10 ஆம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் மீனவர் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva