பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுனர் தமிழிசை உத்தரவு!
பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுனர் தமிழிசை உத்தரவு!
புதுவை மாநில துணை நிலை ஆக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்ட தமிழக தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
புதுச்சேரியில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தற்போதைய நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு சட்டசபையில் 14 எம்எல்ஏக்களின் பலம் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் எதிர்க் கட்சிக்கும் 14 எம்எல்ஏக்கள் பலம் உள்ளதால் இரு தரப்பினர்களும் சம பலத்தில் உள்ளனர்
இந்த நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளதால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தனது ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிப்பாரா அல்லது ஆட்சி கவிழுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்