செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (09:01 IST)

கவர்னர் மாளிகையில் இருந்து வெளியேற தாமதப்படுத்துவது ஏன்?

இன்னும் ஓரிரு நாளில் புதுவையில் இருந்து வெளியேறுவேன் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார். 

 
புதுவை துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி சமீபத்தில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் முறைப்படி தமிழிசை சவுந்தரராஜன் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் ஆக பொறுப்பேற்றார். 
 
மேலும், முன்னதாக பதவி நீக்கப்பட்ட கிரண்பேடியை வழியனுப்பும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வழக்கமாக பதவியை விட்டு வெளியேறும் கவர்னர்கள் வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தவுடன் கவர்னர் மாளிகையை விட்டு உடனடியாக வெளியேறுவார்கள். 
 
ஆனால், கிரண்பேடி கவர்னர் மாளிகையில் 2 நாட்கள் தங்குகிறார். அங்கு உள்ள விருந்தினர் அறையில் அவர் தங்கியுள்ளார். திடீரென நீக்கப்பட்டதால் இன்னும் ஓரிரு நாளில் புதுவையில் இருந்து வெளியேறுவேன் என்றும் தனது பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவதாகவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.