புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2021 (17:48 IST)

தமிழிசை செளந்தரராஜனுக்கு வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்!

தமிழிசை செளந்தரராஜனுக்கு வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்!
புதுவை ஆளுனர் கிரண்பேடி திடீரென நேற்று நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தெலுங்கானா கவர்னராக இருந்து வரும் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே 
 
மேலும் இன்று காலை அவர் புதுவை துணைநிலை ஆளுநர் ஆக பொறுப்பு ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதுவை மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் 
அவர்கள், இன்று (18.2.2021) புதுச்சேரி துணை நிலை ஆளுநராக (கூடுதல் பொறுப்பு) பதவியேற்றமைக்கு, எனது சார்பாகவும், தமிழ்நாடு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.