1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (19:41 IST)

தமிழகத்தை அடுத்து புதுவையிலும் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறித்த செய்தியைப் பார்த்தோம் மேலும் பள்ளி மாணவர்கள் வகுப்புக்கு வரும்போது பெற்றோர்களின் ஒப்புதல் பெற்ற கடிதங்களை கொண்டுவரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுவையிலும் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுவை மாநிலத்தில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கும், வரும் 12ம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் அவர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரியவருகிறது. இருப்பினும் கட்டுப்பாடு பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என்றும், கட்டுப்பாடு பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் மட்டும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை முதல் கட்டமாக பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புதுவை அரசு அறிவித்துள்ளது
 
மேலும் தமிழகத்தை போலவே புதுவை மாணவர்களும் பெற்றோர்கள் அனுமதி பெற்ற கையொப்பம் பெற்று வந்தால் மட்டுமே வகுப்புகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது