வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

எஸ்பிபிக்கு பாரத ரத்னா: வேண்டுகோள் வைத்த முதல்வர், ஆதரவு தெரிவித்த பாஜக பிரமுகர்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் சமீபத்தில் மரணமடைந்த நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினரும் இந்தியாவில் உள்ள அனைத்து துறையினரும் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் எஸ்பிபிக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது எழுந்து வருகின்றன. குறிப்பாக எஸ்பிபி  இரங்கல் தெரிவித்த புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் எஸ்பிபி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
 
இந்த கோரிக்கையை ஆமோதித்த இசையமைப்பாளரும் பாஜக பிரமுகருமான கங்கை அமரன் எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது கிடைக்க தான் குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். இசையமைப்பாளர் கங்கை அமரன் பாஜக பிரமுகர் மட்டுமின்றி பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
எனவே அவர் அந்த குழுவிற்கு பாரத ரத்னா விருதுக்காக எஸ்பிபி பெயரை பரிந்துரை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே எஸ்பிபிக்கு பாரதரத்னா விருது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்