தொடர்புடைய செய்திகள்
- அக்.1 முதல் மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு
- தமிழகத்தில் எத்தனை சதவிகிதம் பாடத்திட்டங்கள் குறைப்பு? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
- நிலத்தை பெற உரிமையாளர்கள் அனுமதி தேவையில்லை!?? – தமிழக அரசு புதிய சட்டம்!
- வரதட்சனைக் கொடுமை… தண்டனைக் காலத்தை உயர்த்த பரிந்துரை!
- மத்திய அரசு எவ்வளவு வற்புறுத்தினாலும் இதை மட்டும் செய்ய மாட்டோம்:அமைச்சர் செங்கோட்டையன்
பாடங்களில் சந்தேகமா? அழையுங்கள் 14474... செங்கோட்டையன் அறிவிப்பு!
மாணவர்கள் தங்களுடைய பாடங்கள் குறித்த சந்தேகங்களை 14474 உதவி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம் என செங்கோட்டையன் அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் இனிமேலும் பள்ளிகள் திறந்தாலும் 100 சதவீத பாடங்களை முடிக்க முடியாது என்பதால் பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு மட்டும் குறைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் செங்கோட்டையைன் பின்வருமாறு பேசினார், பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே பாடங்களை குறைப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து அறிவிப்பார்.
பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை இந்த மாத இறுதி வரை நடக்கும். அதேபோல, மாணவர்கள் தங்களுடைய பாடங்கள் குறித்த சந்தேகங்களை 14474 உதவி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
