புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 ஜூன் 2021 (15:31 IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் சுரேஷ் காமாட்சி நன்றி

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் பெண்கள் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வைக்க வேண்டாம் என இன்று காலை டிஜிபி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆகிய சுரேஷ் காமாட்சி நன்றி தெரிவித்துள்ளார் 
 
சுரேஷ் காமாட்சி இயக்கிய ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படத்தில் பெண் போலீசார் ஒருவர் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பவற்றை தெளிவாக அந்த படத்தில் காண்பித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது போலவே பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டாம் என்று அறிவித்த முதல்வர் அவர்களுக்கும் டிஜிபி அவர்களுக்கும் நன்றி என சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
 
டைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் "மிகமிக அவசரம்" படம் எடுத்தற்காக  உண்மையாகவே பெருமைகொள்கிறேன். பாராவிலிருந்து விலக்களித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் டிஜிபி அவர்களுக்கும் படம் உருவாகவும் மக்களிடம் சென்று சேரவும் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.