வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (14:34 IST)

நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட குழு அமைப்பு!

தமிழகத்தில் நீட் தேர்வு ஆரம்பித்தது முதலே எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் திமுக அரசு தற்போது பதவியேற்றுள்ள நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டுமென்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன 
 
அந்த வகையில் தற்போது நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 9 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து உள்ளார். இந்த குழு நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கலந்து ஆலோசித்து ஆய்வு செய்யும் என்றும் அதன் பின்னர் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்துள்ளார்
 
இந்த குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த அறிக்கையை அரசுக்கு கிடைத்த உடன் அதன் அடிப்படையில் நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த  குழுவில் உள்ள ஒன்பது பெயர்கள் பெயர்கள் பின்வருமாறு;