வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2019 (11:30 IST)

பிரியாணியால் ஏற்பட்ட விபரீதம்.... உயிரைவிட்ட சிறுமி!!!

அரக்கோணத்தில் பிரியாணியால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அரக்கோணத்தை சேர்ந்தவர் சீனிவாசன். கூலித்தொழிலாளியான இவருக்கு மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் உறவினர் ஒருவர் சீனிவாசனுக்கு பிரியாணி கொடுத்துள்ளார்.
 
இதனை வீட்டிற்கு எடுத்து வந்த சீனிவாசன் ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார். அடுத்த நாள் காலையில் ஃப்ரிட்ஜில் இருந்த பிரியாணியை சுட வைத்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்துள்ளனர். இதனை சாப்பிட்ட குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்தனர்.
 
உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் அவரின் 5 வயது மகள் கோபிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.