மேடையில் ஏற்பட்ட விபரீதம்.... உயிரைவிட்ட காமெடி நடிகர்!!!

comedy
Last Updated: சனி, 13 ஏப்ரல் 2019 (20:06 IST)
பிரித்தானிய நகைச்சுவை நடிகர் ஒருவர் மேடையில் காமெடி செய்துகோண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டானியாவை சேர்ந்தவர் லான் கொக்நிட்டோ. 60 வயதான இவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி மேன். இவரது காமெடிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
 
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் மேடையில் பர்ஃபாமன்ஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நாற்காலியில் விழுந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் ஏதோ காமெடி செய்கிறார் என நினைத்தார்.
 
ஆனால் சற்று நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அப்பொழுது தான் அவருக்கு ஏதோ பிரச்சனை என மக்கள் உணர்ந்தனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :