வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2019 (16:02 IST)

முனியம்மாவின் முறையற்ற காதல்: புது புருஷனை போட்டுத்தள்ளிய அவலம்....

தர்மபுரியில் கள்ளக்காதலுக்கு தடையாய் இருந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன்(23) கட்டிட தொழிலாளியான இவருக்கும் முனியம்மாள்(20) என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முனியம்மாளுக்கு திருமணத்திற்கு முன்பே விஜய் என்ற வாலிபருடன் தொடர்பு இருந்துள்ளது.
 
விஜய் உடனான உறவை திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்தார் முனியம்மாள். இந்த விஷயம் வெங்கடேசனுக்கு தெரியவரவே அவர் முனியம்மாளை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த முனியம்மாள் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வெங்கடேசனை வண்டியில் வரும் போது கொலை செய்தார்.
 
பின்னர் வெங்கடேசன் விபத்தில் இறந்துவிட்டதாக ஊரை நம்ப வைத்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் முனியம்மாள் முன்னுக்குபின் முரனாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது.
 
இதையடுத்து போலீசார் விஜய் மற்றும் முனியம்மாள் ஆகிய இருவரையும்  சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.