1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (15:44 IST)

கொரோனா சிகிச்சை: 110 தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி

110 தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பை கண்டறிய மட்டும் வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதித்த நோயாளிகள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகள் நிரம்பி வருவதால் தற்போது தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது
 
முதல் கட்டமாக தமிழகத்தில் 110 பேர் தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 11 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது