புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (14:00 IST)

ஆஃபீசை கொரோனா வார்டாக மாற்றிய ஷாரூக்கான்! – குவியும் பாராட்டுகள்!

கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்து வரும் சூழலில் தனது 4 அடுக்கு மாடி அலுவலகத்தை கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த நடிகர் ஷாரூக்கான் அளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவால் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மகராஷ்டிராவின் மும்பை நகரில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக தனது 4 அடுக்கு அலுவலகத்தை மும்பை மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளார் நடிகர் ஷாரூக்கான்.

அந்த கட்டிடத்தில் தேவையான தண்ணீர் வசதி, படுக்கைகள் உள்ளிட்ட சகல வசதிகளையும் ஷாரூக்கான் செய்து கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக மும்பை கார்ப்பரேசன் ஷாரூக்கான் மற்றும் அவரது மனைவி கௌரிகானுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளது. அதை தொடர்ந்து #SRKOfficeForQuarantine என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.