1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2024 (17:35 IST)

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

Annamalai s ve shekar

திமுகவை கண்டித்து அண்ணாமலை தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டதை, காமெடி சீனோடு ஒப்பிட்டு பேசியுள்ளார் முன்னாள் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர்.

 

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இன்று தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டார். மேலும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுத்துள்ளார்.

 

இந்த விவகாரத்தை தொடர்ந்து பாஜகவினர் பலர் தங்களை சாட்டையால் அடித்துக் கொண்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்ணாமலையின் இந்த செயல்கள் சிரிப்பை வரவழைப்பதாக முன்னாள் பாஜக உறுப்பினர் நடிகர் எஸ்.வி.சேகர் பேசியுள்ளார்.
 

 

இதுகுறித்து பேசிய அவர் “சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்றால் அண்ணாமலை எதற்காக தன்னைத்தானே அடித்து தண்டித்துக் கொள்ள வேண்டும். அவர்தான் சட்ட இலாகாவுக்கு பொறுப்பாளியாக இருக்கிறாரா? சாட்டையால் அடித்துக் கொள்வதுதான் ஒரு தலைவருக்கு தகுதி என்றால் எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவராக இருக்க வேண்டும். அண்ணாமலை போன்ற நபர்களை தேர்வு செய்ததற்கு பாஜக மேலிடம்தான் தங்களை சாட்டையால் அடித்துக் கொள்ள வேண்டும்” என விமர்சித்து பேசியுள்ளார். நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு படத்தில் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதை குறிப்பிட்டுதான் எஸ்.வி.சேகர் இவ்வாறு பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

 

அதேசமயம், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பல திரை, அரசியல் பிரபலங்கள் அண்ணாமலைக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K