1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (19:35 IST)

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு முன்னுரிமை- புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!

vijay
நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கினார். இது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதால் விஜய் மக்கள் இயக்க   நிர்வாகிகளும், ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
 
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை  அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
 
இதில், 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும்,  புதிதாக வரும் நபர்கள் பணியாற்றிய இன் அவர்களின் பணியைப் பொறுத்தே பொறுப்பு வழங்கப்படும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
 
மேலும், தொகுதிக்கு 30 ஆயிரத்துக்கும் மேல் ரசிகர்கள் இருப்பதால் அவர்களை கட்சிப் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ;2 தொகுதிகள் ஒரு மாவட்டமாக அமைத்து நிர்வாகிகளை நியமனம்  செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு த.வெ.க-ல் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.