விஜய் தங்களது தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என பாஜக நம்புகிறது- கோவை சத்யன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நேற்று தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்து தனது அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதில், 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று தெரிவித்திருந்தார்.
விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது புதிய கட்சி பற்றி அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தங்களது தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என பாஜக நம்புகிறது என அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் நாட்டில் வளர்ந்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் பாஜக உள்ளது வெளிப்படையாக தெரிகிறது. ரஜினிகாந்தை கட்சி தொடங்குமாறு கூறி வற்புறுத்தினார்கள், ஆனால் அவர் தப்பித்துவிட்டார். அடுத்த தூண்டில் விஜய்தான். கமிழ் நாட்டில் வளர்ச்சியைப் பெற திரைத்துறையில் இருந்து ஒரு முகம் தேவை என பாஜக நினைக்கிறது. அந்த தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என்று தெரிவித்துள்ளார்.