வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:56 IST)

பிரேமலதா புலம்பி என்ன பயன்? கொசுவா கூட மதிக்காத கூட்டணிகள்!!

கூட்டணியால் தேமுதிகவிற்கு என பிரேமலதா கூறியதை கூட்டணி கட்சிகள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. 
 
தேமுதிக தமிழக அரசியலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய காலம் ஒன்று இருந்தது. 60 ஆண்டுகாலம் பாரம்பரியம் கொண்ட திமுகவை எதிர்க்கட்சியாக ஆக கூட வர முடியாமல் 2011 தேர்தலில் 29 தொகுதிகளில் எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்தது.  
 
ஆனால் ஒரு கட்டத்தில் அக்கட்சி அப்படியே தேக்கம் அடைந்தது. அதன் பிறகு பெரிதாக தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதன் பின்னர் மக்கள் நலக் கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி என தேர்தல்களை சந்தித்து வருகிறது. 
 
இந்நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபிரன்ஸில் பிரேமலதா, ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி வைத்துவைத்து,  கூட்டணி கட்சிகளுக்கு தான் பலன் கிடைக்கிறது. தேமுதிக கட்சிக்கோ அல்லது தேமுதிக தொண்டர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை.  
 
இனி வரக்கூடிய தேர்தல்களில் தேமுதிக வெற்றி பெறவேண்டும். நம் நிர்வாகிகள் வெற்றி பெறவேண்டும் என்ற விதத்தில் வியூகம் அமையுங்கள் என பேசியுள்ளார். கூட்டணியால் பயனில்லை என கூறிய பிரேமலதாவின் கூற்றை கூட்டணியில் உள்ள அதிமுக - பாஜக மதிக்க கூட இல்லை. 
 
இவரது கருத்துக்கு எதிர்ப்பாவது ஏதாவது வரும் என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஆக மொத்தம் தேதிமுகவின் அரசியல் பயணம் அடுத்த தேர்தலில் ஆட்டம் கண்டுவிடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.