செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:15 IST)

அதிமுகவை சய்லெண்ட் மோடில் இருந்தே கவிழ்த்த திமுக!!

நாமக்கல்லில் பல அதிமுகவினர் திமுகவில் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக பல குழப்பங்களை சந்தித்து இப்போது ஒரு வழியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையின் கீழ செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் இன்னும் 7 மாதத்தில் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் மற்ற கட்சி ஆட்களை குறிப்பாக திமுகவினரை கட்சிக்குள் இழுக்க உள்வேளை நடப்பதாக தகவல் வெளியானது. 
 
அதிமுக அமைச்சர்கள் ஜெயகுமார் மற்றும் செலூர் ராஜூ திமுகவினர் வந்து எங்கள் கட்சியில் இணைந்துக்கொள்ளலாம் என பேசினார்கள். ஆனால், தற்போது நாமக்கல்லில் பல அதிமுகவினர் திமுகவில் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களில் மிக முக்கியமானவர் அமைச்சர் தங்கமணி. இவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று தற்போது பொதுப்பணியில் ஈடுபட துவங்கியுள்ளார். இவர் தொகுதியான நாமக்கலில் கிராம வாரியாக அருந்ததியின சமுதாய இளைஞர்களை சந்தித்து அவர்களை திமுக பிரமுகர் ராஜேஷ்குமார் திமுகவில் இணைத்துள்ளார்.