கர்நாடகா காவி மயமாகாது ; அது கலர்புல்லாக இருக்கிறது : பிரகாஷ்ராஜ் டிவிட்
கர்நாடகா காவி மயமாகாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த கர்நாடக பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்திற்கு பின், நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்.
கர்நாடக சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத சூழ்நிலையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே அது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரகாஷ்ராஜ் “கர்நாடகா இனி காவிமயமாகாது. அது வண்ணமயமாக இருக்கும். ஆட்டம் தொடங்கும் முன்பே முடிந்துவிட்டது. பாஜகவால் 55 மணி நேரம் கூட தாக்குபிடிக்க முடியவில்லை. அரசியல் நகர்வுகளை மக்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். நான் கேள்விக் கேட்டுக்கொண்டே இருப்பேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.