1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 ஜூன் 2020 (14:05 IST)

பொதுமுடக்கத்தில் எப்படி இருக்க வேண்டும்? போலீஸ் கெடுபிடி!

பொதுமுடக்க நாட்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் ஜூன் 19 ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். 
 
இந்த முழு ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் இன்று நள்ளிரவு முதல் யாரும் வாகனங்களில் வெளியே வரகூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நாட்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வங்கிகளுக்கு செல்லும் ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்து செல்ல வேண்டும். 
 
21 மற்றும் 28 ஆம் தேதி ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் 
அவசர மருத்துவ தேவைக்கு மட்டும் பிற வாகனங்கள் பயன்படுத்தப்படலாம் 
 
இ-பாஸ் வைத்திருப்பவர்கள் அதை பெரிய அளவில் ஜெராக்ஸ் எடுத்து காவல்துறையினருக்கு தெரியும்படி காண்பிக்க வேண்டும் 
 
போலியான இ-பாஸ் வைத்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை பாயும் 
 
பொதுமுடக்கத்தின் போது அத்தியாவசிய தேவைக்காக கடைகளுக்கு செல்லும் மக்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நடந்து செல்ல வேண்டும்
 
எந்தவித அனுமதி சீட்டுமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும், உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்