வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 ஜூன் 2020 (13:03 IST)

நாளை முதல் முழு பொதுமுடக்கம் - கொத்தவால்சாவடி மார்க்கெட் மூடல்!!

சென்னை கொத்தவால்சாவடி மார்க்கெட் நாளை முதல் 30 ஆம் தேதி வரை மூடல் என் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் ஜூன் 19 ஆம் தேதி முதல் அதாவது நாளை 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பபட்டது. 
 
இதனைத்தொடர்ந்து முழு பொதுமுடக்கம் காரணமாக சென்னை கொத்தவால்சாவடி மார்க்கெட் நாளை முதல் 30ஆம் தேதி வரை மூடல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னரே, ஜூன் 21, 28 ஆம் தேதி அதாவது அடுத்த இரண்டு ஞாயிற்றுகிழமைகளில் திருமழிசை காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.