கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர் – பெரம்பலூரில் காவல் நிலையம் மூடல்!
பெரம்பலூரில் கொரோனாவால் காவலர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1323 ஆக உள்ள நிலையில் சிகிச்சையில் குணமாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 10 மருத்துவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இப்போது ஒரு காவல் அதிகாரிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் வி களத்தூரில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவருடன் பணிபுரிந்த காவலர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையம் முழுவதும் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் மீண்டும் சரியாகும் வரை அருகிலேயே ஒரு வேனில் நடமாடும் காவல்நிலையத்தை அமைத்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளது.
இதே போல காலையில் சென்னையில் ஒரு பத்திரிக்கையாளருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.