புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (12:52 IST)

சென்னையில் பத்திரிக்கையாளர் ஒருவருக்குக் கொரோனா! திருவல்லிக்கேனியில் பரபரப்பு!

சென்னையில் தனியா ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இன்றுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 ஆக உள்ளது. தமிழக பாதிப்பு நிலவரங்களை சுகாதாரத்துறை செயலாளர் அல்லது மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் ஆகியவர்கள் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் தனியார் ஊடகம் ஒன்றின் மருத்துவப் பிரிவு செய்தியாளராகப் பணியாற்றிய செய்தியாளர் ஒருவருக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தங்கியிருந்த திருவல்லிக்கேணி மேன்ஷன் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.