புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (13:10 IST)

டெல்லியில் அறிகுறியே இல்லாமல் 186 பேருக்குக் கொரோனா! ஊரடங்கை விலக்க அரவிந்த கெஜ்ரிவால் மறுப்பு!

டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 186 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1893 பேர் பாதிக்கப்பட்டு 42 பேர் வரை பலியாகியுள்ளனர். ஆனால் இன்னும் ஒருவர் கூட குணமாகி வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அங்கு ஒரே நாளில் 186 பேருக்குப் புதியதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. ஆனால் இந்த 186 பேருக்கும் எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமலே இருந்துள்ளனர் என்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. வரும் 42,000 பேரை கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனால் மத்திய அரசு அறிவித்துள்ள படி நாளை முதல் ஊரடங்கு தளர்த்தலை செயல்படுத்த முடியாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.