செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (11:39 IST)

இந்திலயே பேசுறார்.. ஒண்ணும் புரியல! – மேனேஜரால் கடுப்பான பொதுமக்கள்!

புதுக்கோட்டை அருகே உள்ள இந்திய வங்கி கிளையின் மேலாளர் இந்தியில் பேசுவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குழிபிறையில் இந்தியன் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளர் இந்தி மட்டுமே தெரிந்தவர் என்பதால் வாடிக்கையாளர்களிடம் இந்தியில் பேசியுள்ளார். அவர் பேசுவது புரியாமல் பொதுமக்களும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

இதனால் பொறுமையிழந்த மக்கள் வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கி மேலாளர் பேசும் இந்தி புரியவில்லை என்றும், இதனால் கடந்த 10 மாத காலமாக தங்களால் கிசான் கார்டு பெற முடியவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு தற்போது வலு பெற்று வரும் நிலையில் இந்தியில் பேசுவதால் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.