விவசாய மசோதாவை ஆதரித்தது பச்சை துரோகம்! – அதிமுகவுக்கு வலுக்கும் கண்டனம்!

ravikumar
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (10:51 IST)
மத்திய அரசின் விவசாய மசோதாவை எதிர்த்து அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்துள்ள நிலையில் அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த மசோதாவை கண்டித்து பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதள அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள விசிக எம்பி ரவிக்குமார் “அகாலிதள அமைச்சரே இந்த விவகாரத்தில் பதவி விலகியுள்ள நிலையில் அதிமுக விவசாய மசோதாவை ஆதரித்தது விவசாயிகளுக்கு செய்யும் பச்சை துரோகம்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

விசிகவை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :