செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (08:28 IST)

உங்களுக்கு ஒரு சட்டம்.. ஊருக்கு ஒரு சட்டமா? – எடப்பாடியாருக்கு டிடிவி கண்டனம்!

சென்னை மேம்பாலம் திறப்பு விழாவில் கூட்டம் கூட்டியது குறித்து முதல்வருக்கு அமமுக டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த விழா குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதன் விதிகளை மீறி முதல்வரே செயல்படுவது அளிக்கிறது. மக்களை வெளியே வர வேண்டாம், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என சொல்லி விட்டு முதல்வர் கொரோனா ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்கவிட்டு கூட்டம் கூட்டி விழா நடத்துகிறார். இதுபோன்ற பாலம் திறப்பு விழாக்களை காணொளி காட்சியில் திறக்க கூடாதா? ஆக மக்களுக்கு மட்டுமே கொரோனா கட்டுப்பாடுகள் தனக்கு கிடையாது என முதல்வர் நினைக்கிறாரா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.