பிரதமர் புகழ்ந்த சிப்பிப்பாறை நாய்; பாஜக தலைவருக்கு பரிசளித்த தொண்டர்கள்!

L Murugan
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (08:44 IST)
பிரதமர் மோடியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் தமிழக பாஜக தலைவருக்கு தொண்டர்கள் அளித்த பரிசு வியப்பை அளித்துள்ளது.

பிரதமர் மோடியின் 70 வது பிறந்தநாள் விழா நேற்று பாஜகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாஜகவினர் பல இடங்களில் கேக் வெட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர்.

சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வளாகத்தில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தலைமையில் வழக்கறிஞர் அணி சார்பாக கேக் வெட்டி மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது வழக்கறிஞர் அணியினர் எல்.முருகனுக்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாக அளித்துள்ளனர்.

சமீபத்தில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிப்பிப்பாறை, ராஜபாளையம் உள்ளிட்ட தமிழக நாட்டு நாய்களின் முக்கியத்துவம் குறித்து பேசியிருந்த நிலையில் இந்த நாய்க்குட்டி பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :