திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (16:40 IST)

திருப்பதி லட்டு எந்த ஒரு அறிக்கையும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பவன் கல்யாண் கூறி உள்ளார்-செல்வ பெருந்தகை!

ஆனைமலையில் நல்லாரு  திட்டம் என்ற  விவசாயிகள் வாதம் நடைபெற்று வருகிறது.
 
அதில் பங்கேற்க காங்கிரஸ் சார்பில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகை  செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் பேசியதாவது.......
 
விவசாயிகளுடைய நலன் காப்பதற்கு பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் பல திட்டங்களை கொண்டு வந்தார் அந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களும் மாபெரும் திட்டங்கள் உருவாக்கப்பட்டது பத்தாண்டு காலமாக வேளாண் பெருங்குடி மக்கள் சாலைகளில் போராடும் நிலைகளை பார்த்து வருகிறோம் கடன் சுமையால்  ஜப்தி  நடவடிக்கை எடுக்கப்படுகிறது மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம் அடைவதற்கு காரணமாக இருந்தவர் பாஜக அந்த சட்டத்தை மறுபடியும் திரும்ப பெற்றார்கள்  வேளாண் துறை வாழ்க்கையில் விளையாடுகின்ற பாஜக  அரசு என கூறிய அவர் கொங்கு மண்டலத்தில் விவசாயிகளின் வாழ்வாரத்தை மேம்படுத்த மாநாடு நடைபெறுகிறது.
 
திருப்பதி லட்டு எந்த ஒரு அறிக்கையும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பவன் கல்யாண் கூறி உள்ளார்.
 
அவர்  மிகப்பெரிய ஆதி புத்திசாலி அவர்கள் பல அறிக்கை விட்டிருக்கிறார் உண்மை வெளிவர வேண்டும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் அங்குள்ள பக்தர்களுக்கு தேவை இல்லாத குழப்பத்தை ஆந்திராவின் அரசு ஏற்படுத்துகிறது அங்கு கொடுக்க பட்ட நெய்  குஜராத் என கூறப்படுகிறது குஜராத் யார் அந்த கம்பெனி உரிமையாளர் யார் அந்த அறிக்கை கொடுப்பது குஜராத்தில் இருந்து எப்படி வந்தது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.