வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (13:45 IST)

சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்! - பவன் கல்யாண் ஆவேசம்! உதயநிதி கொடுத்த பதில்!

Udhayanithi vs Pawan Kalyan

சனாதனம் குறித்து பேசிய பவன் கல்யாண் மறைமுகமாக உதயநிதி ஸ்டாலினை விமர்சித்ததாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்காக ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் 11 நாட்கள் விரதமிருந்து திருப்பதி கோவிலில் தரிசனம் செய்தார்.

 

பின்னர் மக்கள் கூட்டத்தினடையே அவர் உரையாற்றியபோது, சனாதனத்தை அழிக்க வேண்டும் என சிலர் வெளிப்படையாகவே மேடைகளில் பேசி வருவதாகவும், சனாதன தர்மத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் எனவும் பேசியிருந்தார்.
 

 

கடந்த ஆண்டில் ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ தற்போதைய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், அவரைதான் பவன் கல்யாண் மறைமுகமாக பேசுகிறார் என பேசிக் கொள்ளப்பட்டது. லட்டு விவகாரத்தில் பவன் கல்யாண் தேவையில்லாமல் உதயநிதியை குறித்து அவதூறாக பேசுவதாக, பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாஞ்சிநாதன் என்பவர் மதுரை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இந்த பிரச்சினை குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் சிம்பிளாக “பொறுத்திருந்து பாருங்கள் (Wait and See)” என்று பதிலளித்து விட்டு சென்றுள்ளார். இரு மாநில துணை முதல்வர்கள் இடையேயான இந்த உரசல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K