ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2024 (13:15 IST)

மகாத்மா காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை!

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகில் மகாத்மா காந்தி சிலை கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. 
 
இந்த மகாத்மா காந்தி சிலை பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருப்பதாக குளித்தலை நகர மன்றத்தில் திமுக தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா தலைமையில் துணைத்தலைவர் கணேசன் மதிமுக மற்றும் 21 திமுக நகர மன்ற உறுப்பினர்கள் காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
இந்நிலையில் வட்டாட்சியர் தலைமையில் கடந்த ஆண்டு அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அரசியல் கட்சியினர்களில் திமுக கட்சிகளை தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வட்டாட்சியர் தலைமையில் அனைத்து அரசியல் கட்சியினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கலந்து கொண்ட அரசியல் கட்சியினர்கள்  காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என எதிர்ப்புகளை பதிவு செய்து எழுத்து மூலமாக தெரிவித்தனர்.
 
மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக நகராட்சி கமிஷனர் தெரிவித்ததின் பேரில் காந்தி சிலையை சுற்றி உள்ள அனைத்து அரசியல் கொடி கம்பங்கள் தாங்களாக அகற்றி கொள்வதாகவும் மேலும் காந்தி சிலை சுற்றியுள்ள சுற்றுச்சுவரையும் அகற்றலாம் என அனைத்து அரசியல் கட்சியினர் தெரிவித்தனர். 
 
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் காந்தி சிலையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி கடந்த 21ஆம் தேதி இரவு இரண்டு நாட்கள் முன்பு இரவோடு இரவாக போலீசார் பாதுகாப்புடன் அகற்றுவது என முடிவு செய்தனர். 
 
காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆங்காங்கே ஒன்று கூடியதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார்கள் பாதுகாப்பு பணியை கைவிட்டனர்.
 
காந்தி சிலை அகற்றும் பணி கைவிடப்பட்டது. 
 
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் குளித்தலை இன்ஜினியர் பிரபாகரன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை யிடம்  போன் மூலம் தகவலை தெரிவித்ததின் பெயரில் செல்வப் பெருந்தகை கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுடன் தொடர்பு கொண்டு காந்தி சிலையை அகற்றக் கூடாது மேலும் இது குறித்து தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று கூறியதன் பேரில் காந்தி சிலை அகற்றும் பணி நிறுத்தம் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் திருச்சியில் இருந்து நாமக்கல்லுக்கு நிகழ்ச்சியை கலந்து கொள்ள சென்றபோது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை குளித்தலை மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.