வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (14:38 IST)

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு யோகிபாபு நன்றி: என்ன காரணம்?

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் அவர்களுக்கு தமிழ் நடிகர் யோகி பாபு தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக இருந்த பவன் கல்யாண் சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராக பதவி ஏற்றார் என்றும், அவரது செயல்பாடுகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது.

குறிப்பாக திருப்பதி லட்டு விவகாரத்தில் அவரது நடவடிக்கை, பேச்சு மற்றும் குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக யோகி பாபு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது:

என்னுடைய திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படமான மண்டேலா - படத்தை முக்கியமான நேரலையில் நினைவு  கூர்ந்த ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும் தெலுங்கு திரை உலகத்தின் முக்கியமான திரைஆளுமையுமான திரு.
பவன் கல்யாண்  அவர்களுக்கு என்னுடைய பணிவார்ந்தநன்றிகள்


Edited by Siva