திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (20:48 IST)

பகுதி நேர ஆசிரியர்கள் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

karur
பகுதி நேர ஆசிரியர்கள் கைதை கண்டித்து கரூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் - உலக ஆசிரியர் தினத்தில் மேற்கொண்ட கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்தனர்.
 
சம வேலைக்கு சம ஊதியம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சில தினங்களாக சென்னை டிபிஐ அலுவலகத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 
 
போராட்டம் தொடர்பாக அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 'நிதிச் சுமை இருப்பதால் எதுவும் செய்ய முடியாது, கலைந்து செல்லுங்கள். எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள்' எனக் கூறியும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர்.
 
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். இந்த கவிதை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50 ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்ததை கண்டித்தும், உலக ஆசிரியர் தினத்தன்று கைது நடவடிக்கை மேற்கொண்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தனர்.