திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (15:36 IST)

தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
 
இன்று நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். பின்னர் இந்த விழாவில் அவர் பேசியபோது, தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது என்றும், அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது இல்லை என்றும், குற்றசெயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
 
பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற பெண், பட்டியலினத்தவர் என்பதால் பதவியேற்க முடியவில்லை என்றும், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 7 சதவீத குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர்  என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக ஆளுநரின் இந்தக் கருத்துகளால் தமிழக அரசியலில் பரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran