'படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா' - கவர்னர் தமிழிசை டுவீட்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு நட்சத்திர விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தெலுங்கான மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பாணியில் வாழ்த்துக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். ஆரம்ப காலத்தில் பேருந்து நடத்துநராக இருந்தவர் , இயக்குநர் சிகரம் பாலச்சந்தரனின் பார்வை பட்டு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வளர்ந்தார்.
இந்நிலையில்,வரும் நவம்பர் 20 ஆம் தேதி கோவாயில் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படத்துறையில் நடிகர் ரஜினியின் சேவையைப் பாரட்டி அவருக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூபிலி என்ற விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதற்கு, தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியை வாழ்த்தி ஒரு டிவிட் செய்துள்ளார்.
அதில், அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்ததை வாழ்த்தி வாழ்நாள் சாதனையாளர் விருது. படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் , சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.