ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2019 (11:34 IST)

தோல்வியில் முடிந்த முதல் காதல் - காதலியை இன்னும் தேடும் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பஸ் கண்டெக்டராக வேலை பார்த்த ரஜினி பிறகு சென்னை வந்தது சினிமாவில் நடித்து தன்னை தானே உச்சத்தில் வளர்த்துக்கொண்டார்.  அதையடுத்து நடிகை லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்று இரண்டு மகளும் பிறந்தார்கள்.

 
இந்நிலையில் தற்போது ரஜினிக்கு ஒரு ழகிய காதல் இருந்ததாகவும் அது தோல்வியில் முடிந்ததாகவும் பாட்ஷா பட வில்லன் தேவன் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த பார்ட்டி ஒன்றில் ரஜினி, ஜனகராஜ் மற்றும் விஜயகுமார் அவர்களை அழைத்திருந்தார். அங்கு அவர்கள் அனைவரும் சேர்ந்து தங்களது கடந்த காலா வாழக்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ரஜினி தனது முதல் காதல் பற்றி தெரிவித்துள்ளார். 
 
ரஜினி கூறியது, நானும் தேவனும் பெங்களூரில் கண்டக்டராக வேலை செய்து வந்தோம். அப்ப மெடிக்கல் காலேஜில் படித்து கொண்டிருந்தவர் தான் நிர்மலா. பஸ்ஸில் போகும் கொண்டிருந்தவர் வரும் போது எங்களுக்கு சந்திப்பு ஏற்பட்டது. எங்களது முதல் சந்திப்பு சண்டையில் தொடங்கியது. பின்னர் அவர்களை காதலிக்க தொடங்கினேன். மேலும், நிர்மலா என்ன நிறைய என்கரேஜ் பண்ணுவாங்க. அவங்க சொல்லி தான் நான் சென்னைக்கு வந்தேன். நான் வரும்போது  என்னிடம் ரூ. 500 கொடுத்துட்டு எங்கிரேஜ் பண்ணி உன்னால முடியும் சென்னைக்கு போய் கலக்கு என்று சில்லி அனுப்பி வைத்தார். 
 
பின்னர் சினிமாவில் நுழைந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி கண்ட பிறகு நிர்மலாவை தேடி பெங்களூர் சென்றேன். ஆனால், அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாகவும் கூறினார்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல்  ரொம்ப கஷ்டப்பட்டு என் மனசு உடைஞ்சு அழுதுட்டேன். எப்டியாவது அவங்கள பார்த்து பேசனும் என்று யோசித்து பல நாட்கள் தேடியும் கிடைக்கல. திரும்பி நான் சென்னை வந்து விட்டேன். ஆனால், என்னுடைய முதல் காதல் எப்போதும் என்னால மறக்க முடியாது. இந்த நியாபகங்கள் தர்பார் படத்தின் மூலம் மீண்டும் எனக்கு நினைவுப்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டாரின் முதல் காதல் இப்படி ஒரு சோகத்தில் முடிந்ததா என அவரது ரசிகர்கள் வருத்தத்துடன் இதை ஷேர் செய்து வருகின்றனர்.