புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (17:42 IST)

'பெண் குழந்தை'யை உயிரோடு புதைக்க முயன்ற தந்தை

தெலுங்கான மாநில, ஹைதராபாத் அருகே உள்ள கிராமத்தில், பிறந்த பெண் குழந்தையை உயிரோடு புதைக்க முயன்ற தந்தை மற்றும் தாத்தவை போலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள ஜூப்ளி பேருந்து நிலையத்தில் போலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் நடமாடிக் கொண்டிருந்தனர்.
 
அவர்கள் இருவரையும் பிடித்த போலீஸார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது, தங்கள் துணிப்பையில் வைத்திருந்த பச்சைகுழந்தையை உயிரோடு புதைக்க திட்டமிட்டு இருந்ததாகத் தெரிகிறது.
 
மேலும், குழந்தை இறந்துவிட்டதால் புதைக்க இங்கு வந்ததாகவும் கூறியுள்ளனர். அவர்களின் பேச்சில் மேலும்  சந்தேகம் அடைந்த போலிஸார்,பெண் சிசுக்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.