அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் திமுகவை சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டு குறித்து திமுக சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி தனது காதலனுடன் இருக்கும்போது, அவரை வீடியோ எடுத்து மிரட்டிய ஞானசேகரன் என்பவர், மாணவியை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஞானசேகரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக குற்றம் சாட்டிய பாஜகவினர், இதை கண்டித்து போராட்டம் நடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டதை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார். மேலும் குற்றவாளி திமுகவை சேர்ந்தவர் என்பதால் அவரை காப்பாற்றுவதற்காக, மாணவி குறித்த தகவல்களையும் கசிய விட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மறுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லை. அவர் திமுக நிர்வாகி என பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K