செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (07:21 IST)

நாடு முன்னேற எல்லோரும் பாஜக பின்னால் செல்ல வேண்டும்: பிரபல காமெடி நடிகர்!

நாடு முன்னேற வேண்டுமென்றால் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு பின்னால் மக்கள் எல்லோரும் செல்ல வேண்டும்  என்றும் பழம்பெரும் காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கூறியுள்ளார்.
 
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் திராவிட இயக்கங்களுக்கு சாதகமான சூழல் இருந்தது என்றும், ஆனால் தற்போது பாஜகவுக்கு சாதகமான சூழல் அமையும் என தான் எதிர்பார்ப்பதாகவும்  நடிகர்  ஒய். ஜி. மகேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். 
 
மக்களுடைய ரசனைகள் மாறி மாறி வருவதாகவும் ஒரு காலத்தில் நான் தான் முன்னணி காமெடி நடிகனாக இருந்தேன், எனக்கு பின் கவுண்டமணி, வடிவேலு ஆகியோர் வந்தனர். அதேபோல் மக்களின் பார்வை பாஜக பக்கம் திரும்பும் என்றும் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்தார்.
 
தமிழ் திரையுலகமும் விரைவில் பாஜக பக்கம் செல்லும், இனி திராவிட கட்சிகளின் ஆதிக்கம் தமிழகத்திலும் தமிழ் திரையுலகிலும் எடுபடாது என்றும் அவர் மேலும் கூறினார்.
 
எம்ஜிஆர் உள்பட பல நடிகர்கள் திராவிட கட்சிகளை வளர்த்த நிலையில் தற்போது பாஜகவை தமிழகத்தில் முன்னணி நடிகர்கள் சிலர் ஆதரித்து வருவதால் ஒய்.ஜி.மகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாஜகவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வரும் ஒய்.ஜி.மகேந்திரன், அக்கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வரும் ரஜினிகாந்துக்கு நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது