வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 மே 2022 (20:55 IST)

ப சிதம்பரத்திற்கு ராஜ்யசபா பதவியா? கொந்தளிக்கும் காங்கிரஸ் பிரபலங்கள்!

P Chidambaram
ப சிதம்பரத்திற்கு ராஜ்யசபா பதவியா? கொந்தளிக்கும் காங்கிரஸ் பிரபலங்கள்!
நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி பதவி ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த ஒரு எம்பி பதவியை காங்கிரஸ் வேட்பாளராக ப சிதம்பரம் அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மக்களவை எம்பியாக இருக்கும் நிலையில் அவரது தந்தைக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதா என காங்கிரஸ் தலைவர்கள் கூறிவருகின்றனர் 
 
சமீபத்தில்தான் சோனியா காந்தி ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி தான் என்று அறிவித்திருந்த நிலையில் தந்தை மகன் ஆகிய இருவருக்கும் எம்பி பதவி கொடுப்பது காங்கிரஸ் கட்சியின் நலனுக்கு நல்லதல்ல என்று காங்கிரஸ் பிரமுகர்கள் கொதித்தெழுந்து வருகின்றனர்