திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (09:15 IST)

இனி 20 - 30 வருடங்களுக்கு பாஜக தான் வேறு வழியே இல்லை - பிரசாந்த் கிஷோர்!

இன்னும் 20 - 30 வருடங்களுக்கு பாஜக எனும் கட்சியை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும் என பிரசாந்த் கிஷோர் பேட்டி. 

 
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் எக்ஸ்பிரஸ் eAdda எனும் நிகழ்ச்சியின் சமீபத்திய பதிப்பில் தேர்தல் வியூகவாதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர் கலந்துக்கொண்டார். அப்போது அவர் வரும் தசாப்தங்களில் பாஜக ஏன் ஒரு வலிமைமிக்க தேர்தல் சக்தியாக இருக்கும், எப்படி காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பேசியுள்ளார். 
 
அதில் குறிப்பாக பாஜக பற்றி அவர் பேசியதாவது, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் 20 - 30 வருடங்களுக்கு பாஜக எனும் கட்சியை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும். எந்த ஒரு கருத்தியலோ அல்லது விஷயமோ அதன் உச்சத்தை அடைந்த பின்னர் கட்டாயம் அது சரிவை சந்திக்கும் என்பது விதி. 
 
பாஜகவுக்கும் இந்த நிலை ஒரு நாள் ஏற்படும், ஆனால் அடுத்த 5 முதல் 10 வருடங்களுக்கு அது நடைபெறாது. இதற்காக வருகிற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும் என நான் கூறவில்லை. ஒன்று பாஜகவை ஆதரிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும். மாறாக அதனை புறக்கணிக்க இயலாது. சுதந்திர இந்தியாவில் முதல் 40 வருடங்களுக்கு காங்கிரஸ் ஆட்சி இந்த நிலையில் தான் இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.